--- --:--:-- --

தரமற்ற அரிசி வழங்கியதால் ரேஷன் கடையை முற்றுகை செய்த மக்கள்..!

10

சிதம்பரம் அருகே ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கவில்லை என கூறிய பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடையில் ஆய்வு நடந்துள்ளது.

 

இந்த பகுதியில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் நியாய விலை கடையில் நிறுத்தப்பட்ட அரிசி தரமற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த அரிசி உண்பதால் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Right Menu Icon