நடுவானில் இருக்கைக்காக சண்டை போட்ட பயணிகள்..!
விமானத்தில் இருக்கைகளுக்காக் சண்டை போடும் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் பாங்காகில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் நடு வானில் பயணிகள் இடையே இருக்கை தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியதில் பயணி ஒருவரை சக பயணிகள் கூட்டாக சேர்ந்து தாக்கத் தொடங்கினார்கள். விமானத்திலேயே இந்த சண்டை அரங்கேறியதால் பரபரப்பு ஏற்பட்டதோடு பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.





