காதலனுடன் மாணவி சென்றதால் பெற்றோர் விஷமருந்தி தற்கொலை..!
சேலத்தில் பள்ளி மாணவியை காதலித்து இளைஞருடன் சென்றதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் அந்த இளைஞரை எச்சரித்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.





