--- --:--:-- --

பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன்-தீபிகா காதலை உறுதிப்படுத்திவிட்டார்களா?

11

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் சின்னத்திரைக்கு பெருமை சேர்த்த ஒரு தொடர். எப்படியென்றால் பல தொடர்கள் வேறொரு மொழியில் இருந்து ரீமேக் ஆகி ஓடுகிறது, ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்படி இல்லை. தமிழிலேயே உருவாக்கப்பட்ட ஒரு கதை, இதனை பல மொழிகளில் ரீமேக் செய்துள்ளார்.

 

அப்படிபட்ட இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. கதையும் அதேபோல் தான் நகர்ந்து வருகிறது.இந்த தொடரில் கண்ணன்-ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் சரவணன் மற்றும் தீபிகா ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்கள் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் பேசினாலும் இதுவரை அவர்கள் உறுதிப்படுத்தாமலேயே இருந்தனர்.

 

இந்த நிலையில் தான் நடிகை தீபிகா, சரவண விக்ரமுடன் இருக்கும் படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து, நாம் ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான் டீல் மை டியர் என பதிவு செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon