பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சி..!
மஹாராஷ்டிர மாநிலம் புனே பல்கலைக்கழகத்தில் ‘எதிர்காலப் போர்கள் மற்றும் போர்முறை’ என்ற தலைப்பில் உரையாற்றிய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே பாகிஸ்தானின் லட்சியமாக இருந்ததாக கூறினார்.
ஆனால் பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, வெறும் 8 மணி நேரத்தில் இந்தியா ராணுவம் முறியடித்ததாக அவர் தெரிவித்தார். இதனால் அஞ்சிய பாகிஸ்தான் போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியதாக அவர் கூறினார்.மே 10-ம் தேதி பாகிஸ்தான் தரப்பிலிருந்து பல முனைகளில் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் நோக்கம் 48 மணி நேரத்தில் இந்தியாவை சரணயடைய வைப்பதாக இருந்தது.
ஆனால், இந்திய ராணுவத்தின் திறமையான பதிலடியால், அவர்களது திட்டம் வெறும் 8 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் தரப்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் துல்லியமான தாக்குதலால் போர் முறையில், ஆப்ரேஷன் சிந்தூர் புதிய வரலாற்றை படைத்ததாகவும் அனில் சவுகான் தெரிவித்தார்.





