பதவி நீக்கம் செய்யப்படுகிறார் நீதிபதி வர்மா..!
வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி வர்மா பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய, ஜூலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. நீதிபதி ஒருவரை பணிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.





