24 கி.மீ. சைக்கிளிலேயே பயணம் செய்து பள்ளிக்கு செல்லும் மாணவி பொதுத்தேர்வில் சாதனை..!
மத்திய பிரதேசத்தில் 24 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்ற பள்ளி பயின்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் . சம்பல் மண்டலத்தில் உள்ள அஜ்நோல் என்ற கிராமத்தை சேர்ந்த மாணவி ரோசினி பத்தோரியா தனது கிராமத்தில் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேகோன் என்ற இடத்தில் பள்ளி படிப்பு பயின்றார்.
அங்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 24 கிலோ மீட்டர் தூரமும் சைக்கிளிலேயே சென்றுவந்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்தார். அண்மையில் வெளிவந்த பத்தாம் வகுப்பு தேர்வில் ரோஷினி 98.75% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.







