பாடகர் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: திக்விஜய் சிங் விமர்சனம்
இந்தியா மீது குண்டுகள் வீசியவரின் மகனுக்கு பத்மஸ்ரீ விருது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் அறிவிக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பட்டியலில் பிரபல பின்னணி பாடகர் அத்னன் சமியின் பெயர் இடம்பெற்றிருந்தது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றார். இவருடைய தந்தை அஸ்வத் ஸ்வாமி பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றினார். இவருடைய மகன் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ வழங்கப்படுவது ஏன் என காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்தூரில் அரசியலமைப்பை காப்போம், நாட்டை மீட்போம் என்ற பெயரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய போது இந்தியா மீது குண்டுகள் வீசியவரின் மகனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்று நரேந்திர மோடிக்கு ஆட்சிக்கு வந்த பின்னரே அத்னன் சமிக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவிற்காக போராடிய முன்னாள் ராணுவ வீரர் முகமது சனாமுல்லாவின் பெயர் அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு இலையே இடம்பெறவில்லை என்றும் இதுதான் மோடியின் குடியுரிமை சட்டம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.






