--- --:--:-- --

3வது அணி வேண்டாம், ப்ளீஸ்! காங்கிரஸுக்கு ப.சிதம்பரம் அட்வைஸ்!

P. Chidamparam 01

மூன்றாவது அணியில் எனக்கு நம்பிக்கை கிடையாது, திமுக அணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

 

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்குவதில் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை; பொறுத்தது போதும் என்ற மனநிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கூட்டணி வைப்பது பற்றி காங்கிரஸ் பேச்சு நடத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

இந்த சூழலில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

 

பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றால் தமிழ் மீது இந்தியும், சனாதனதர்மமும் திணிக்கப்படும். பாஜக தமிழ் நாட்டில் வெல்லக் கூடாது. வெற்றி பெற்றால் காங்கிரஸ் இடத்தை பாஜக தமிழகத்தில் பிடித்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. எனவே, தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல் அகில இந்திய அளவிலும், இங்கு உள்ள கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தல்.

 

நான் பாஜகவை பார்த்து அச்சம் கொள்ளவில்லை. ஆனால், தென் இந்தியாவில் காங்கிரஸின் தவறான கொள்கைகள் மற்றும் உத்திகளால் பாஜக வளந்துள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் கைக்கு ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டது. அதிமுக தமிழகத்தில் பலமாகத்தான் இருகிறது. அதிமுக வெற்றி பெறவே பெறாது. தமிழ்நாட்டில சில இடங்களில் அதிமுக வெற்றி பெறும்.

 

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் தமிழ் மீது இந்தி, சனாதனதர்மம் திணிக்கப்படும். என்னை எப்படி கூறு போட்டாலும் இதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். திமுக கூட்டணியில் இருந்தால்தான் பாஜகவை எதிர்க்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் அழிவிலிருந்து பாதுகாக்க இந்த தேர்தல் மிக முக்கியமானது. மூன்றாவது அணியில் நம்பிக்கை கிடையாது.

 

இந்திய முழுக்க தேசிய முகம் உள்ள கட்சி என்றால் அது காங்கிரஸ் மட்டும்தான். மத ஒற்றுமையை நிலைநாட்ட பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டின் குரல் திமுக. அதேபோல, இந்திய நாட்டின் குரல் காங்கிரஸ் என்று, ப. சிதம்பரம் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon