திருச்சியில் இன்று நடைபெறும் திமுகவின் ‘விடியலுக்கான முழக்கம்’..!
திருச்சியில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்கம் மூலம் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அறிவிக்கிறார். சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக திருச்சியில் 16 வது மாநில மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது.
ஒரு ஏக்கரில் திமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வந்தனர். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநாடு பொதுக்கூட்டம் ஆக மாற்றப்பட்டுள்ளது. 3 மேடைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இரண்டு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
பிற்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கும் நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 90 அடி உயரகம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார். கொடி கம்பத்தில் இருந்து மேடை வரை தொண்டர்களுக்கு நடுவே ஸ்டாலின் நடந்து செல்லும் வகையில் நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார்.







