வெளிநாடுகளில் சிக்கிய 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு!
வெளிநாடுகளில் சிக்கி தவித்த 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 3 விமானங்களில் தாயகம் திரும்பியுள்ளனர். கொரொனா ஊரடங்கால் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கி இருப்பதால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாத நிலை உள்ளது.
வந்தே பாரத் மிஷன் வாயிலாக அவர்களை மத்திய அரசு இந்தியா அழைத்து வருகிறது. இரண்டாவது நாளில் சிங்கப்பூரிலிருந்து 234 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அதேபோன்று வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து இந்திய மருத்துவ மாணவர்கள் 160 பேர் ஸ்ரீநகர் அழைத்து வரப்பட்டனர். சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து 150 இந்தியர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைந்தனர்.
இதனிடைய இந்தியாவிலிருந்து 80 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை சென்றடைந்தது. 48 நாட்களுக்கு பின் முதன்முறையாக ஏர் இந்தியா விமானம் அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.







