--- --:--:-- --

ஆன்லைன் மது விற்பனைக்கு அனுமதி! டாஸ்மாக் மூட காரணம் என்ன?

3

தமிழகத்தில் கொரொனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது முறையாக வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டன . மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 

அதில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்திருந்தது.

 

குறிப்பாக சமூக இடைவெளிகளை முறையாக பின்பற்ற வேண்டும். மது வாங்க வருபவர்களிடம் ஆதார் அட்டை தகவல்களை பெற வேண்டும் மொத்தமாக விற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வில்லை என்பதால் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராகேஷ் மற்றும் மக்கள் நீதி மையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும் ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்ய அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply

Right Menu Icon