--- --:--:-- --

தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உத்தரவு..!

2

மிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் உடன் இணைந்துள்ள அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள மது கடைகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித் துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது எனவும் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை விற்க மட்டும் தான் அனுமதி எனவும், மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி எனவும் மாறாக டாஸ்மாக் நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பார்களை நடத்த அனுமதி இல்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

பொது இடங்களில் போதையில் இருக்கும் நபர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபானம் அருந்திய நபர்கள் பொது இடங்களில் நடமாடுகிறார்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon