விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என ஓபிஎஸ் பேச்சு..!
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் தான் உதாரணம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சியை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரி வருகின்றனர்.
இதனால் யாரை ஆதரிப்பது என தெரியாமல் அதிமுக கூட்டணி கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். தற்போது வரை அமைதி காத்து வரும் பாஜக தன்னுடைய நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து பரபரப்புக்கு மத்தியில் பேசும் குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பன்னீர்செல்வம் அங்கு தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசியவர் குஜராத் மாநிலம் புனிதமானது என்று மகாத்மா காந்தி, பிரதமர் மோடி ஆகியோரை பெற்றது குஜராத்திலும் தெரிவித்தார்.





