முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை..!
ஆவின் நிறுவனத்தை அழிவு பாதையில் இருந்து ஆக்கபூர்வ பாதைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் ஆவின்பால் பொருட்கள் பொதுமக்களுக்கு தடை இன்றி கிடைக்கவும், கொள்முதல் விலையை உயர்த்தவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





