--- --:--:-- --

பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு தடை..?

9

புதிய பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைமை சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெராய்டு வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.

 

இதற்கிடையே அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தனது பாஸ்போர்ட் ஒப்படைக்க அவர் புதிதாக சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கில் சுப்பிரமணியசாமி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன் ராகுல் காந்தியின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்பொழுது புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையிலா சான்று வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்பதாகவும் ஆனால் அவர் கேட்ட பத்து வருடங்களுக்கு அல்லாமல் மூன்று வருடங்களுக்கு தடையில்லா சான்று வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon