--- --:--:-- --

நாளை இறுதி முடிவு எடுக்கப் போகும் ஓபிஎஸ்..!

6

க்களவை தேர்தலில் பாஜகவுடன் ஆன தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நிலவி வரும் நிலையில் இதுவரையில் நாளை ஓ.பன்னீர்செல்வம் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, தமாக உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு உறுதி செய்துள்ளனர்.

 

எனினும் கூட்டணியில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை இதுவரை இறுதி செய்யவில்லை கூட்டணியில் ஓபிஎஸ் தரப்பில் மூன்று தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருவதால் ஆதரவாளர்களுடன் தனித்தனியை ஓபிஎஸ் கருத்து கேட்டு வருகிறா. இதில் பாஜக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை கட்டாயம் கேட்டு பெற வேண்டும் என ஓபிஎஸ்-சிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நாளை ஓபிஎஸ் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

 

Right Menu Icon