--- --:--:-- --

பொது சிவில் சட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

2

நாடாளுமன்ற நிலை குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். நாடாளுமன்ற நிலை குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

நீதி மற்றும் சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சுசில் தலைமையில் பொது சிவில் சட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் நடந்த விவாதத்தில் பெரும்பாலான எதிர்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இந்த சட்டத்தை கொண்டு வர பார்ப்பதாக அந்த கட்சிகள் குற்றம் சாட்டினர்.

 

காங்கிரஸ் எம்.பி., திமுக தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். உடனடியாக பொதுச் சிவில் சட்டம் தொடர்பான விவாதம், கருத்து கேட்பு உள்ளிட்டவற்றை நிறுத்த வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

 

இதனிடையில் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் இதர பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று சுசில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon