சபரிமலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நிரந்தரமாக்கப்படும்..!
சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நிரந்தரமாக்கப்படும் என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார் .
சபரிமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு முறை கொண்டும் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
இதனால் பக்தர்கள் கடும் சிரமங்கள் தவிர்க்கப்பட்டு நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது என டிஜிபி தெரிவித்தார். இதுதவிர தினசரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப காவல் துறையின் பாதுகாப்பு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முன் கூட்டியே திட்டமிட்டு அவற்றை திறம்பட தயார்படுத்த முடிந்ததாகவும் டிஜிபி கூறினார்.
எனவே வரும் காலங்களில் ஆன்லைன் முன்பதிவு முறையில் தரிசனத்திற்கு அனுமதிக்கும் முறை பின்பற்றப்படவேண்டும் அவர் கூறியுள்ளார்.







