--- --:--:-- --

திருப்பூரில் மேலும் ஒரு மணி நேரம் தளர்வு : இன்று 83 பேருக்கு தொற்று உறுதி.. 4 பேர் பலி!

tutut

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 88 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 83 ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 880 ஆக உள்ளது.தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காலை 6 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கடைகள் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் மேலும் ஒரு மணி நேரம் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Reply

Right Menu Icon