தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக வெள்ளிக்கிழமை தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளது.
மேலும் 15, 16 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







