எம்ஆர்பியை விட ஒரு ரூபாய் அதிகம் வைத்து விற்றதால் ஒரு லட்சம் அபராதம்..!
அதிகபட்ச சில்லறை விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்த கடை வாடிக்கையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது, சதீஷ் என்ற வழக்கறிஞர் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூரில் உள்ள கடையில் காலனி வாங்கி இருக்கிறார்.
அதில் அதிகபட்ச சில்லறை விலை 279 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் கடையில் 280 க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக கடையின் மேலாளரை கேட்டபோது இஷ்டப்பட்டால் வாங்கிக் கொள்ளும்படி அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சதீஷ் நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ்க்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாயும் வழக்கு செலவாக 5,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.






