தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வரி, மின்கட்டண உயர்வு என மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். ஆகவே மக்களின் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு இருக்கிறது. நான் வெற்றிபெற்று வந்ததும் அவிநாசி வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்றப்படும். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் 2ம் கட்டம் விரைவில் முடிக்கப்படும் என வேட்புமனு தாக்கல் செய்தபின் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.