--- --:--:-- --

மான்களில் கண்டறியப்படும் ஓமிக்ரான் வைரஸ்..!

8

மெரிக்காவில் முதன் முறையாக மான்களில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஐயோகா மாகாணத்தில் வாழும் 131 மான்களிடம் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.

 

இதில் 19 மான்களிடம் கொரொனாவால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 7 மான்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது சில வெள்ளைநிற மான்களுக்கு கொரொனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த உயிரி மருத்துவப் பேராசிரியர் மான்கள் மூலம் மனிதர்களுக்கு கொரொனா பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது என தெரிவித்தார்.

 

Right Menu Icon