ஒரே டேபிளில் மு.க ஸ்டாலின் உடன் அமர்ந்து உண்ட ஓபிஎஸ்..!
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் ஒரே டேபிளில் முக ஸ்டாலின் உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் அமர்ந்து உணவருந்துவது மிகுந்த கவனத்தைப் பெற்றது.
புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருந்து அளித்துள்ளார்.
அப்போது முக ஸ்டாலின் உடன் முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் ஒரே டேபிளில் அமர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.






