ஒ.பி ரவீந்திரநாத் தகுதி நீக்கம்.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு..!
ஓ.பி ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மார்ச் 20ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேல்முறையீட்டு மனு தொடர்பாக ஓ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வராத நிலையில் உச்சநீதிமன்றத்தில் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் ஓ.பி.ரவீந்திரநாத்தை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனைவி மார்ச் 20ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.





