--- --:--:-- --

என்.எஸ்.இ. முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா கைது..!

7

தேசிய பங்குச்சந்தை முறைகேடுகள் தொடர்பாக எல்ஐசியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

 

பங்குச் சந்தை நிலவரங்களை அறிந்து கொள்ளும் கொலோக்கேசன் செயலி தொடர்பான ரகசியங்களை இமயமலை சாமியாருக்கு பகிர்ந்தது, ஆனந்த் சுப்ரமணியனை நியமித்தது உள்ளிட்ட முறைகேடுகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

 

வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆனந்த் சுப்பிரமணியத்தை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்ந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்றத்தில் இன்று சித்ரா ராமகிருஷ்ணாவை ஆஜர்படுத்த உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon