இனி தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு ஒரே கால அட்டவணை!
தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே கால அட்டவணையைக் கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் உயர் கல்விக்காக மற்றொரு பல்கலைக்கழகத்திற்கு செல்லும்பொழுது வெவ்வேறு கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறுவதால், குழப்பங்கள் ஏற்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் உயர் கல்விக்காக மற்றொரு பல்கலைக்கழகத்திற்கு செல்லும்பொழுது வெவ்வேறு கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறுவதால், குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
இதனை தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இளங்கலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு, முதுகலை இரண்டாம் ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இளங்கலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு ஜூன் 30ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இளங்கலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு, முதுகலை இரண்டாம் ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இளங்கலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு ஜூன் 30ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரி தொடங்கி 45ஆம் நாளில் முதல் பருவத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், செப்டம்பர் மாதம் 23 முதல் 30 ஆம் தேதிக்குள் இரண்டாம் பருவத் தேர்வு நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கி 45ஆம் நாளில் முதல் பருவத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், செப்டம்பர் மாதம் 23 முதல் 30 ஆம் தேதிக்குள் இரண்டாம் பருவத் தேர்வு நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16 முதல் 27 ஆம் தேதிக்குள் மாதிரித் தேர்வை நடத்தி முடித்து, 31 ஆம் தேதி மதிப்பெண்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 16 முதல் 27 ஆம் தேதிக்குள் மாதிரித் தேர்வை நடத்தி முடித்து, 31 ஆம் தேதி மதிப்பெண்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும், நவம்பர் 4-ம் வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும், நவம்பர் 4-ம் வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.





