--- --:--:-- --

இந்தியாவில் 21 மாநிலங்களில் ஒருவருக்குக்கூட கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை..!

3

நாடு முழுவதும் கொரொனா தடுப்பூசி செலுத்தும்படி நடைபெற்று வரும் நிலையில் 21 மாநிலங்களில் ஒருவருக்குக்கூட கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

 

விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் ஜோஷி அளித்த பதிலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. ஒன்பதாம் தேதி வரை இந்தியா முழுவதும் 62 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

இதில் 59 லட்சத்து 56 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

 

அதாவது கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட கொரொனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை என புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon