வடமாநில தொழிலாளர்கள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. ஒருவர் உயிரிழப்பு..!
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் நான்கு வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த ஒருவர் உயிரிழந்தார்.
ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள நெல் உற்பத்தியாலையில் தங்கி வேலை பார்த்து வரும் நான்கு வட மாநில தொழிலாளிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 80 விழுக்காடு தீக்காயம் அடைந்திருந்த ஒடிசாவை சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஜேடர்பாளையம் பகுதியில் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.






