கொலையில் முடிந்த ஓரினச்சேர்க்கை காதல்..!
கல்லூரி மாதவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருவத்திபுரத்தை சேர்ந்த 20 வயது பாபு என்பவர் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
அவருக்கும் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பைசல் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வியாபாரம் செய்யும் அளவிற்கு நட்பு வளர்ந்த நிலையில் பாபு செய்யாறு திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பைசல் நண்பன் பாபுவை லாவகமாக பேசி குளக்கரைக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு வைத்து பாபுவை தீர்த்து கட்ட முடிவு செய்த நிலையில் தனது கூட்டாளிகள் உட்பட நான்கு பேராக சேர்ந்து பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தலை, கை, கால்கள் சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.
பாபுவை மீட்டு செய்யாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த நிலையில் சென்னையை சேர்ந்த நிலையில் சென்னையை சேர்ந்த பைசல் மற்றும் அவரது கூலிப்படை கூட்டாளிகள் பாலாஜி, பிரபு, ராஜ் எனமொத்தம் நான்கு பேரை கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
ஃபைசல் பாபு இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் வேறு ஒருவருடன் பாபு பழகியதை தாங்க முடியாத பைசல் கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





