ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது..! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!!
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்றும் இத்திட்டம் செயல்படுத்தப்படாது எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கான சட்ட முன்வடிவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடர்பாக திமுக எம்எல்ஏ அன்பரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட மாட்டாது என உறுதியளித்தார்.





