--- --:--:-- --

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம்..!

5

திர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது . தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதலமைச்சர் பங்கேற்கும் நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. வழக்கமான வருடாந்திர கூட்டமாக நடைபெறும் இந்த கூட்டம் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பை அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக மாறி உள்ளது.

 

மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக செய்யப்பட்டு வந்த மத்திய திட்ட குழுவை 2014ல் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கலைத்து விட்டது.

 

பின்னர் நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. தேசத்திற்கான வளர்ச்சி கொள்கைகளை வகுத்து மாநில முதலமைச்சர்கள் பரிந்துரைக்கும் அம்சங்களை இந்த அமைப்பு விவாதிக்கிறது. இன்றைய கூட்டத்தை பொருத்தவரை வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றும் அகன்ற பாரதம் 2047 இலக்கு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

 

Right Menu Icon