--- --:--:-- --

சென்னை திநகரில் திறக்கப்படும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்!

9

சென்னை தி நகர் பகுதி மக்களுக்கு இனி மருத்துவமனைக்கு வெகுதூரம் அலைய வேண்டியதில்லை. ராதாகிருஷ்ணன் தெருவில், நடேசன் பூங்கா அருகே ஒரு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (UPHC) திறக்கப்பட உள்ளது. இந்த மையம், 2.4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இது திறக்கப்படும்.

 

சென்னை மாநகராட்சி (GCC) தகவல்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிக்கப்பட்ட பழைய, பாழடைந்த UPHC-க்கு பதிலாக இந்த புதிய மையம் கட்டப்பட்டுள்ளது.

 

இந்த கட்டுமானத்திற்கு, தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்திடம் (NUHM) இருந்து 1.2 கோடி ரூபாயும், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1.2 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த UPHC, இரண்டு தளங்களில் 2,700 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

Right Menu Icon