--- --:--:-- --

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

6

மிழகப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், வினாத்தாள் தயாரிப்பு மற்றும் விநியோகம் குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

குறிப்பாக, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு: யார் பதிவிறக்கம் செய்ய வேண்டும்? – மாவட்டக் கல்வி அலுவலர்கள் (DEO).

 

எப்போது?- இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை. ‘எமிஸ்’ (EMIS) இணையதளத்தில் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து, பள்ளிகள் வாரியாக, வகுப்பு, பாடம் மற்றும் பயிற்றுமொழி வாரியாகப் பிரித்து, உறையிடப்பட்ட கவரில் (Sealed Cover) வைக்க வேண்டும். இந்த வினாத்தாள் உறைகளைத் தேர்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அந்த உறைகளைப் பாதுகாப்பாக வைத்திருந்து, தேர்வு நடைபெறும் நாளன்று வினாத்தாள்களை எடுத்துப் பயன்படுத்த வேண்டும். 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு: https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

 

தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல், தேர்வு நடைபெறும் நாளன்று பிற்பகல் 1 மணி வரை பள்ளிகள் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon