--- --:--:-- --

லேண்ட்லைனிலிருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை..!

2

லேண்ட்லைன் ஃபோன்களிலிருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை அடுத்த ஆண்டு முதல் அமல் ஆகியுள்ளது.

 

லேண்ட் லைன் எனப்படும் தரைவழி தொலைபேசி எண்களில் இருந்து அலைபேசி எண்களை அழைத்து பேசுவதற்கு இதுவரை குறிப்பிட்ட பத்து இலக்க மொபைல் எண்ணை மட்டுமே அழைத்து பேசினால் போதுமானதாக இருந்தது.

 

இந்த நிலையில் தற்போது இந்த போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாட்டு முறை விரைவில் அமலாகிறது.

 

அதன்படி வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து மொபைல் போன்களுக்கு தொடர்பு கொள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னால் பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon