தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் இன்று வழக்கம் போல் திறந்திருக்கும்..!
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களும் இன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் புயலை எதிர்கொள்ள மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல், டீசல் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் விற்பனை தொடங்கப்படும் என்றும் மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் விற்பனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






