--- --:--:-- --

இரவு முழுவதும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள்..!

1.2

மிரட்டி வரும் நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இரவு முழுவதும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இந்த புயல் காரணமாக பயிர்கள் சேதம் அடையலாம் என்பதால் உடனே பயிர் காப்பீடு செய்ய இரு தினங்களுக்கு முன்பே விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் காப்பீடு செய்ய முனைப்பு காட்டினர். எனினும், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் 15ம் தேதி வரையும், பிற மாவட்டங்களில் டிசம்பர் 30-ஆம் தேதி வரையும் காப்பீடு செய்யும் படியும் ஆனால் புயல் சேதத்திற்கு பிறகு காப்பீடு செய்தால் அதற்கான இழப்பீடு செய்ய முடியாது என்பதால் அதற்கு முன்பாகவே காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதனால் தஞ்சாவூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு மையங்கள் மற்றும் தனியார் மையங்களில் விவசாயிகள் இரவிலும் காத்திருந்து பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon