மாஸ்டர் மாளவிகா மோகனை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!
மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறாரா என்றுகேட்கும் வகையில் ஒரு சில காட்சிகளில் நாயகியாக வந்து சென்றவர் மாளவிகா மோகன். மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யை திட்டுவது போன்ற காட்சியில் பல்லைக் கடித்துக் கொண்டு ஆக்ரோஷமாக பாவத்தை காட்டியிருப்பார் மாளவிகா மோகன்.
படம் வெளியான நிலையில் அந்த காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து நெட்டிசன்கள் செய்துவரும் மீம்ஸ் சேட்டைகள் வைரலாகி வருகிறது. பல் தேய்ப்பது, சிக்கனை கடித்து இழுப்பது, பப்லிகாம் விடுவது, சாப்பிடுவது, பால் பாக்கெட்டை கடிப்பது, பாட்டில் திறப்பது என மாளவிகாவை செதுக்கியுள்ளனர்.
மாளவிகாவின் வாய்க்கு போடுமே பூட்டு என்ற விளம்பர முதல் ஸ்னாக்ஸ் திண்பது, பற்களால் டிபன் பாக்ஸ் திறப்பது என்று மீம்ஸ் உருவாக்கிகள் செய்துள்ள சேட்டையால் ட்விட்டர் தெரிகின்றது.
மாளவிகா மோகனன் பற்களைக் கடிக்கும் காட்சிகளை கத்தரித்து பின்னர் காமெடி சந்திரமுகி டயலாக் என்று வீடியோவாகவும் கலாய்த்து வருகின்றனர். தன்னை மீம்ஸ்கள் மூலம் கேலி செய்தவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அவர்களுடன் சேர்ந்து தன்னுடைய மீம்ஸ்களை ரசிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகன்.







