செவ்வாய் கோளில் ஆக்ஸிஜனை தயாரிக்கும் நாசா..!
பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூலம் செவ்வாய் கோளில் ஆக்ஸிஜனை தயாரித்து நாசா புதிய வரலாறு படைத்துள்ளது. பூமிக்கு வெளியே வேற்றுகிரகத்தில் ஒலியை பதிவு செய்து அனுப்பியது, ஹெலிகாப்டரை பறக்கவிட்டது என்ற வரிசையில் தற்போது செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி செவ்வாயின் வளி மண்டலத்திலுள்ள கார்பன்-டை-ஆக்சைடில் இருந்து ஆக்சிஜனை தயாரிக்கிறது. கார் பேட்டரி அளவுள்ள மாக்ஸி எனப்படும் தங்கப் பெட்டியில் உள்ள கருவிகள் மூலம் ஒரு விண்வெளி வீரர் 10 நிமிடம் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு டன் அளவுள்ள இந்த கருவியை செவ்வாய்க்கு அனுப்பினால் அதன் மூலம் 25 டன் ஆக்ஸிஜனை தயாரிக்க முடியும் என்பதால் இந்த சோதனை முயற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






