வங்கியில் பூஜை போட்டு கொள்ளையடித்த மர்ம நபர்கள்..!
கர்நாடகாவில் ஆயுத பூஜையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து 1.25 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்மக் கும்பல் வங்கியின் சேனலை உடைத்து 1.25 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வங்கியில் இருந்த காவலாளி வங்கியை சுற்றி ரோந்து பணியில் சென்று இருந்த பொழுது இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியதாக கூறப்படும் நிலையில் வங்கியில் உள்ள சிசிடிவி மூலம் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





