பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கு தலா ரூ.100 நிதி வழங்கிய மூதாட்டி!
கொரொனா தடுப்பு நிதிக்காக பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தலா 100 ரூபாய் மணியார்டர் அனுப்பி வைத்த மதுரையை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. நாடு முழுவதும் கொரொனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இதற்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி அளிக்க வேண்டும் என்று பிரதமரும், மாநில முதல்வர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மதுரை ஆறு குளம் பகுதியை சேர்ந்த கார்த்திகா என்ற 65 வயது மூதாட்டி பிரதமர் மற்றும் தமிழக மக்கள் அனைத்து மாநில முதலமைச்சர்களும் தலா 100 ரூபாய் மணியார்டர் அனுப்பி வைத்து நிதி உதவி செய்துள்ளார். மறைந்த காவல் ஆய்வாளரின் மனைவியான இவர் தனக்கு வழங்கப்படும் மாத ஓய்வூ ஊதியத்திலிருந்து நிவாரண உதவியை வழங்கி இருப்பது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
சமூக அக்கறையுடன் நடந்து கொண்ட இந்த மூதாட்டியை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் சிக்கியுள்ள வேலூரை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கே சி வீரமணி கூறியுள்ளார்.






