--- --:--:-- --

மருத்துவர் உடலை வேறு இடத்தில் புதைப்பது பாதுகாப்பானது அல்ல

4

கொரொனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மருத்துவர் கடந்த 19ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை நல்லடக்கம் செய்ய கீழ்ப்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து அவரது உடல் வேலங்காடு மயானத்திற்கு கொண்டு வரப்பட்டு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய கணவரின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்று அவருடைய மனைவி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை வல்லுனர்களிடம் மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த அறிக்கையின்படி கொரொனா பாதித்தவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் வெளியில் எடுப்பது பாதுகாப்பானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவரின் மனைவியுடைய கோரிக்கையை ஏற்பது சாத்தியமல்ல என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மண்ணெண்ணெய் வாங்க 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொரொனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 

ஆனால் இதனை சற்றும் கண்டுகொள்ளாத கோனேரிகுப்பம் பகுதி மக்கள் மண்ணெண்ணெய் வாங்க நியாய விலை கடையில் ஒன்றாகக் கூடி அவர்கள் முகக் கவசங்கள் கூட அணியாமல் தனிமனித இடைவெளியையும் பின்பற்றாமல் கூட்டமாக இருந்ததால் நியாய விலை கடை ஊழியர்கள் செய்வதறியாது திணறினர். பின்னர் வந்த காவல்துறையினர் நீண்ட நேரம் முயன்று இடைவெளி விட்டு நிற்கும் வண்ணம் மக்களை ஒழுங்குபடுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon