60 வயது மேற்பட்டவர்கள் தனித்து இருக்க வேண்டும்!
கொரொனா வைரஸ் தொற்று நோய் குறித்து 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு விடுத்துள்ள அறிக்கையில், வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து தனித்து இருத்தல் வேண்டும் என்றும் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும், கைகளை சோப்பால் அவ்வப்போது கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியே வருவதையும், வெளி நபர்களுடன் கலந்துரையாடவும் தவிர்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொண்டைவலி, காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் 104 அவசர தொலைபேசி எண் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






