--- --:--:-- --

பக்தர்களின் கனவில் வந்து உத்தரவிடும் முருகப்பெருமான்.! அடுத்து நிகழப்போகும் அசம்பாவிதம்..!

8

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலில் உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் வந்து உத்தரவின்படி புதிய பொருட்களை வைத்து பூஜை தொடங்கியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் எந்த விதமான ஆபத்துகளை உலகம் எதிர்கொள்ள வருகிறது என்பது நாளடைவில் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிவவாக்கியரால் பாடல் பெற்ற தலமான சுப்பிரமணிய சுவாமி கோயில் சிவன் மலையில் அமைந்துள்ளது. நாட்டில் நிகழவிருக்கும் அசம்பாவிதங்களை முன்கூட்டியே உணர்த்தி வருவதால் காரண மூர்த்தி என்றழைக்கப்படும் சுப்பிரமணியர்கோயிலில் எங்கும் காணப்படாத உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது.

 

இதில் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தும் பொருட்களை பூவால் உத்தரவு கேட்டு பெட்டியில் வைத்து பூஜை நடத்துவது தொன்று தொட்டு தொடரும் வழக்கமாக உள்ளது. ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருளின் காரணமாக நாட்டில் அந்த பொருள் சம்பந்தமாக செயல்கள் நடைபெறும் என்பது ஐதீகம். பூஜை செய்த போது தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது.

 

மண் வைத்து பூஜை செய்தபோது நிலங்களின் மதிப்பு அதிகமானது. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட போது சுனாமி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அண்மையில் கோகுல் என்பவரின் கனவில் உத்தரவு வந்ததாக கூறிய நிலையில் அதன்படி சுவாமி சந்நிதியின் முன்பாக பூ வைத்து பார்க்கப்பட்டது.

 

அதில் சிவப்பு பூ வராமல் வெள்ளைப்பூ வந்ததையடுத்து கனவில் வந்த பொருட்களை உத்தரவு பெட்டியில் வைத்துள்ளனர். சிறிய செம்பில் தண்ணீரை நிரப்பி அதற்குள் சிவலிங்கத்தை வைத்து அதனுடன் ஒரு சங்கு, நாணயங்கள் உள்ளிட்டவற்றை உத்தரவு பெட்டியில் வைத்துள்ளனர்.

 

இந்த உத்தரவிற்கான காரணம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரும் என கோயிலில் குழுக்கள் மற்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon