--- --:--:-- --

தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை..!

10

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தன்னுடைய தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை திட்டமிட்டு கொலை செய்து அதனை விபத்து போல் சித்தரித்த போலீசாரையும் நம்ப வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.

 

கெங்குவார் பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த 24ஆம் தேதி பைக்கில் கொடைக்கானல் செல்லும் சாலையில் பாலம் ஒன்றில் மோதி இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

சிவகுமாரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் சிவகுமாரின் மனைவி பாப்பாத்திக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவனுக்கும் தவறான தொடர்பு இருந்தது தெரியவந்தது.

 

செல்வராஜின் அண்ணன் அய்யனார் என்பவர் சிவகுமாருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளான். பாலம் அருகே வந்தபோது சாமர்த்தியமாக சிவகுமாரை பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோத விட்டு இறங்கி கொண்ட அய்யனார், கீழே விழுந்த சிவகுமாரின் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon