சென்னை மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா..!
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது ஆசிரியருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது. புரசைவாக்கம் அருகே உள்ள நம்மாழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய உதவி தலைமையாசிரியர் நந்தகுமாருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அந்தப் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.






