பல்லடத்தில் ஆனந்தன்! விறுவிறு பிரசாரம்… அதிமுகவினர் குஷி!
பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், வெயிலை பொருட்படுத்தாமல் உற்சாகமாக களமிறங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தலுக்கு 5 நாட்கள் மட்டுமே உள்ளதால், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூட்டணி கட்சியினருடன் அதிமுகவினரையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாக ஆனந்தன் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல், காலையில் தொடங்கி, இரவு வரை பல்லடம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆனந்தன் வாக்கு சேகரித்தார். அதன்படி, பள்ளிபாளையம், இச்சிப்பட்டி, கோம்பக்காடு, புதூர், தேவராயன்பாளையம், அரசு காலனி, சுக்கம்பாளையம், சாமிகவுண்டன்பாளையம், லட்சுமி மில்ஸ், பெத்தாம்பூச்சிபாளையம், செம்மிபாளையம், மாணிக்கபுரம், அண்ணா நகர், 63 வேலம்பாளையம், வி.ஆர்.பி. நகர், நடுவேலம்பாளையம், சின்னியம்பாளையம், வலையப்பாளையம்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் வாக்கு சேகரித்தார்.

சாலையின் இருபுறமும் பொதுமக்கள் காத்திருந்து ஆனந்தனை வரவேற்றனர். பட்டாசு முழங்க, பூக்களை தூவி ஆனந்தனுக்கு அதிமுகவினர் வரவேற்பு தந்தனர். அப்போது பேசிய எம்.எஸ்.எம். ஆனந்தன், சிறப்பான வரவேற்பு அளித்த அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பொதுமக்களிடம் பிரசாரம் செய்த எம்.எஸ்.எம். ஆனந்தன், “மாணவர்களுக்கு மடிக்கணினி தந்தது அதிமுக அரசு. திருமண நிதியுதவியை ரூ.25000 இல் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தித் தந்தது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு வழங்கியது. முதல்வரின் மருத்துவக்காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தியது அதிமுக அரசுதான் என்றார்.





