இளையராஜாவுக்கு எம்பி பதவி – இது ஒரு பெரிய விஷயம் அல்ல எனக்கூறும் பார்த்திபன்..!
R Parthiepan at Thodari Audio Launch
இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்டுள்ளது பற்றி இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாரதிராஜா என் இளையராஜாவின் வளர்ச்சி மிகப்பெரியது எனவும் தெரிவித்துள்ளார்.
எம்பியாக தேர்வு செய்யப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இளையராஜா தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து என அவர் குறிப்பிட்டுள்ளார். மியூசிக் ஆஃப் பாரடைஸ் இளையராஜா என பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ஏற்கனவே ஒரு எம்பி தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இது ஒரு பெரிய விஷயம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





