--- --:--:-- --

ஓசூரில் ஏரி அருகே சிதறிக்கிடந்த 100க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள்

7

ஓசுரில் ஏரி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் அருகே உள்ள சானசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரியில் சிதறிக்கிடந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை அப்பகுதி வழியாக வந்த சிலர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

அதன் பின்னர் சிதறிக்கிடக்கும் ஆதார் அட்டைகளை சேகரித்து நகர காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் ஆதார் அட்டையை வீசி சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆதார் அட்டையை வீசி சென்ற நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon